சக்கரம் சுழல்கிறது.


பரபரப்பு செய்திகள் போடுவது,யாரும் எழுதியதை மீள்பிரசுரிப்பது,சிண்டு முடிவது,ஆய்வு என்ற பேரில் சொறிந்துகொண்டே இருப்பது,யாரோ செய்வதற்கு அறிக்கை விடுவது ,இதைத் தவிர வியாபாரிகளின் விளம்பரத்தில் வாழ்வை ஓட்டுவதைத் தவிர இந்த வெங்காயங்கள் என்ன செய்கிறார்கள்?

 உலகத் தொழிலாளர் தினத்தில் எம்போராட்டத்தை முன்னெடுப்போம் என்றால்,அதை இவர்களால் விளங்கிக் கொள்ள முடியாது.

 

மனித வதைகளுக்கெதிரான சர்வதேச தினத்தில் ஒரு ஒளியை கையேந்தி,ஒருமனதாய் உலகிற்கு அறிவியுங்கள் என்றால் எல்லோரும், மதில் மேற் பூனைகளாக குந்தியிருக்கிறார்கள்.

 சனல் நான்கிற்கு பின்னாலும்,ஜெயலலிதாவின் தீர்மானத்திற்கும் ஜால்ரா’போடுவதைத் தவிர,இருக்கின்ற தலைமைகள்,உலகத் தமிழர்களை மக்குகளாக்கி’ வைத்திருக்கிறார்கள்.

 எல்லாவற்றையும் விட குதிரைக்கு முன்னால் வண்டி பூட்டுவதை,கங்காணிகளாக இருந்து வேலை செய்கிறார்கள்.

 மக்கள் சக்தியை புரிந்து கொள்ளாதவர்கள் தலைமைகளில் இருக்கும் வரை,ஈழ மக்கள் போராட்டம் என்பது கேள்விக் குறியே.

 

“பங்காளிகள் அற்ற போராட்டம் வெற்றியடையாது” என்று எம்மால் வெளியிடப்பட்ட,’தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் பத்திரிகையில்’,முப்பது வருடங்களுக்கு முன் எழுதியதை நினைவுபடுத்தி,இந்தக் “கோமாளிகள்” தளம்,இனியும் ‘விழலுக்கு நீர்ப்பாய்ச்சல்’ செய்வதை நிறுத்திக் கொள்கிறது.

Advertisements

இந்திய ஆசாமிகள் அல்லது ஆமாம்சாமிகள்.


எத்தனை தடவை வந்தார்கள்.எம்மக்களுக்கு என்ன செய்தார்கள் இவர்கள்?இந்தியாவிடம் என்ன இராஜதந்திரம் இருக்கிறது?
சிங்கள பௌத்த பேரினவாத அரசுகள் மாறிமாறி ஆட்சிக்கு வந்தாலும்,அவர்கள் இந்தியாவிற்கு எதிரான கொள்கையைத்தான் கடைப்பிடித்தார்கள்.

மலையகத் தமிழரின் குடியியல் உரிமை பறித்ததைக்க் கூட இந்தியாவால் அன்றும் புரிந்து கொள்ளப்படவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஏகாதிபத்திய அடிவருடித்தனமும்,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சீன அடகு வைப்பும் இந்தியாவால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

துப்பாக்கிக்கட்டையால் தோளில் அடிவாங்கி,புறமுதுகு காட்டி ஓடியதும்,கூனிக் குறுகி கும்புடு போடுவதும் இராஜதந்திரமல்ல.

வருகை தரும் இந்திய இராஜதந்திரிகளுக்கு,வரவேற்பு இனிப்பாக இலங்கையில் இருக்காது.

ஆயினும் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.
சிங்கள பௌத்த பேரினவாதத்திடமிருந்து பணயக்கைதிகளாக இருக்கும் எம்மக்களை விடுதலை செய்.அல்லது ஆக்கிரமிப்பு படையை வெளியேற்று.
தமிழ் போர்க்கைதிகளை விடுதலை செய் அல்லது சட்டத்தின் முன் நிறுத்து.

1948 இலிருந்து அரசாங்கத்தால் நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்களை திரும்பப்பெறு.

பதிக்கப்பட்ட மக்களை மீளக் குடியேற்று.

இலங்கையின் அரசியல் தீர்வு என்பது சர்வதேச பங்களிப்புடன்,நிரந்தர முடிவிற்கு கொண்டு வரப்பட வேண்டும்.இந்தியா அதில் ஒரு பங்காளியாக இருக்கவேண்டும்.

சர்வாதிகார சனாதிபதியிடம், உங்கள் அழுத்தத்தை பிரயோகித்து,முடிவுகளை எடுக்க முடியாவிட்டால்,இந்தியாவின் பாதுகாப்பு என்பது நிரந்தர கேள்விக் குறியாகிவிடும்.

செய்திகள் வாசிப்பது ….பேமானி.


பாமரன் :அண்ணே! செய்தியை வாசிங்கண்ணே!

பேமானி: நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது அமர்வு.

படிச்சவன்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இணையத் தளத்தில் எந்த அறிவிப்பும் இல்லைடா முட்டாள்.

கோமாளி: என்னங்கடா புதுக் குழப்பம்.!

Continue reading

அழுவார் அழுவார் எல்லாம் தம் கவலை!


              அழுவார் அழுவார் எல்லாம் தம் கவலை;
                                                        திருவன் பெண்டிளுக்கழ யாருமில்லை.

பணையக் கைதிகளாக இருக்கும் தமிழ் மக்கள்  இரண்டு வருடங்களாகியும் மீட்கப்படவில்லை.

தமிழீழ போர்க்கைதிகள் விசாரரணைக்கு உட்படுத்த்தப்படவில்லை அல்லது விடுவிக்கப்படவில்லை.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு,சர்வதேச அனுசரணையுடன்  இன்னமும் முன் வைக்கப்படவில்லை.

Continue reading

இரட்சகர்களும் ஈழக்கனவும்.


கெரில்லாப் போராட்டமாக ஆரம்பித்த எமது ஆயுதப் போராட்டம் “தன் கையே தனக்குதவி” என்றபடி வழி தொடர்ந்தது.
மறைவிடங்களாக இருக்க வேண்டிய சொந்த மண்ணை துறந்து,தமிழகத்தை நோக்கிய பயணந்தான் ‘இரட்சகர்களை’ தேடும்
முதல் அடியாக ஆரம்பித்தது.
இரவல் சிந்தனையுடன்,இந்திய கூலிப் படையாக தயார்ப்படுத்தப்பட்ட ஒப்பனையுடன்,தன் கண்ணில் மண் தூவும் கதாபுருசர்கள் சிருஷ்டிக்கப்பட்டார்கள்.
இந்தியாவின் சிறந்த அடிமைகளாக,பிரிட்டிஷ் பேரரசிலிருந்து,இந்திய நேரு பரம்பரை வரை சிபார்சு பண்ணிய தமிழக தமிழ்த் தலைமைக் கங்காணிகளை,ஈழத்தமிழ் இயக்கக்காரர் நம்பினார்கள்.
இந்தத் தலைமைக் கங்காணிகள் புதைகுழிகளை ஈழத் தமிழர்களுக்கு தந்து விட்டு “புதையலோடு’ இருக்கிறார்கள்.புதையலின் பங்குதாரர்களாக புலம்பெயர் தமிழர்களின் தலைமையும் இருக்கிறார்கள்.
மீண்டும் இரட்சகர்களை இந்தியாவில் தேடும் பணியை,இதே ‘புதிய துடைப்பங்கள்” ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்தியாவில் வடக்கே வங்காளிகளும்,தெற்கே மலையாளிகளும் ஆளுமை மிக்கவர்கள்.ஆனால் தமிழர்கள் நல்ல  கங்காணிகள் மட்டுமே.இவர்களை ‘இரட்சகர்களாக’ நம்புகிற நடை பயணங்கள் ஆபத்தானவை.கோடை கால கூத்துகளுக்கு,உண்டியல் குலுக்கிகளுக்கு,தமிழ்நாட்டு சீமான்களும்,வைக்கோ கைக் கூகளும் உதவலாம்.

ஈழ மண்ணில் பணயக் கைதிகளாக வாழும் மக்களுக்கு இவர்களால் எந்தப் பயனுமில்லை.
ஒரே தவறை மீண்டும் செய்வது முட்டாள்தனமானது.வேறு விதமாகச் சிந்திப்போம்.

தெரிந்த மொழியில் பதில்.


     F**K YOU “UN” HUMAN RIGHTS COUNCIL!

நிர்வாணமாக்கப்பட்டு,கைகளைப் பின்னே பிணைத்து,பிடரியில் காலால் உதைத்து,கொலை வெறியாடிய சிங்கள பௌத்த பேரினவாதம்,வெளியிடப்பட்ட காணொளிக்கு பதிலாக, உலகிற்கு தெரிந்த மொழியில், இலங்கை பதிலளித்தது.

பின் லாடன் கொலை பற்றிய சிலரது பார்வைகள்.


பின் லாடன் கொலை பற்றிய சிலரது பார்வைகள் பெரும்பான்மையுடன் ஒத்துப்போக மறுத்தாலும்,உண்மைகளை வெளிக்கொணர,துணிந்து குரல் கொடுக்கப்பட வெண்டும்.

மனிதர்கள் பல்வேறுபட்ட நிலையில் வாழ்ந்தாலும்,நியாயம் கேட்க கூடியவர்களால் மட்டுமே மனிதம்  வாழ்வது உறுதிப்படுத்தப்படுகிறது.
 
கருத்துகள் வெளியிடப்பட்ட வரிசையின்படி.

1.ஒரு கோரப்படுகொலையின் மௌனப் பயணிப்பு.கோமாளிகள்      

https://komaalikal.wordpress.com/2011/05/05/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9/

2.Bin Laden killing left ‘uncomfortable feeling’ – Rowan Williams

  http://www.guardian.co.uk/world/2011/may/05/bin-laden-uncomfortable-feeling-rowan-williams

3.My Reaction to Osama bin Laden’s Death.Noam Chomsky
                   

  http://www.guernicamag.com/blog/2652/noam_chomsky_my_reaction_to_os/

4.Fueling Hatred and Revenge. The Assassination of Osama Bin Laden FIDEL CASTRO

  http://www.counterpunch.org/castro05062011.html

 

ஈழத்தமிழ் மக்கள் போராட்டத்தின் இரண்டு திருப்புமுனைகள்.


                மூதூரில் பணியாற்றிய சர்வதேச தொண்டு நிறுவனத்தின் ஊழியர்கள் கொலை தொடர்பாக அமைக்கப்பட்ட கமிசனுக்கு தலைவராக ‘மனித உரிமை புகழ்’  மகிந்தவால் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றியவரே இந்த ‘மனித உரிமை புகழ்’ மார்சுகி  தருஸ்மன்.
தமது பணிகளுக்கு அரசு முட்டுக் கட்டையாக இருப்பதாக தருஸ்மன்
 தமது பதவியை தூக்கி எறிந்து விட்டு வெளியேறினார்.இவரை பான் கீ மூன் தேர்ந்தெடுத்தது தற்செயலான காரியமில்லை.

இது ஈழத்தமிழ் மக்கள் போராட்டத்தின் முதலாவது  திருப்புமுனை.

 திமுகத் தமிழர்கள் ‘ராசா’க்களாக மாற முற்பட்டு,ஈழத்தமிழரை இனப்படுகொலைக்கு இட்டுச் சென்றார்கள்.இந்தியத்தமிழர்களால் நிராகரிக்கப்பட்டார்கள்.
தோற்றவர்கள் ஈழத்தமிழரின் போராடடத்தை தூக்கிப் பிடிக்கப் போகிறார்கள்.
இதை ஈழத்தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

இது ஈழத்தமிழ் மக்கள் போராட்டத்தின் இரண்டாவது   திருப்புமுனை.

ஒரு மாற்றுச் சிந்தனையுடன்….


எங்கோ பாடலாய் ஒலித்தவை.

பரபரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன்னேன்
வரவரக்கண்டாராய் மனமே – ஒருவருக்கும்
தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதே
ஏங்கி இளையா திரு.

Continue reading

அரசாங்கமும் ஆடுகளமும்.


        வானம் தெரியும் முகடும்,வார்ந்தெடுத்து வேயாத கிடுகும்,சேலைக்கு வழியற்ற தமிழ் பெண்களும்,சேர்த்தெடுத்து இறக்கிய முதியோரும் சூனிய வெளிகளில்,பேரினவாத ஈபிடிபி பிரிவினர் ‘மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு’ காணுகிறார்கள்.

Continue reading