செய்திகள் வாசிப்பது ….பேமானி.


பாமரன் :அண்ணே! செய்தியை வாசிங்கண்ணே!

பேமானி: நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது அமர்வு.

படிச்சவன்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இணையத் தளத்தில் எந்த அறிவிப்பும் இல்லைடா முட்டாள்.

கோமாளி: என்னங்கடா புதுக் குழப்பம்.!

பாமரன்: அவங்க கிடக்கிறாங்க!செய்தியை தொடர்ந்து வாசிங்கண்ணே

பேமானி: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை (03-06-2011) பாரிஸ் புறநகர்ப் பகுதியான நந்தேரில் ஆரம்பமாகியது. தொடர்ந்து மூன்று நாட்கள் இடம்பெற்ற இந்த அமர்வில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன.

பாமரன்: (விசிலடி அய்யன்னா’ மன்றம் வரை கேட்குது.)அடேங்கப்பா! மூணாவது அமர்வு,மூணு நாளு,முக்கிய முடிவுகள்.

பேமானி:உனக்கு வாசிச்சு என் காதே செவிடாச்சு.

படிச்சவன்: மூன்றெழுத்திலே ஒரு சிறப்புண்டு, முத்தமிழ் மணமுண்டு!
மூவேந்தர் முக்கொடி முக்கனி…

கோமாளி:அதற்கேண்டா மூணு எண்டு முணுமுணுக்கிறாய்.மு.க.தான் இப்ப இல்லையே.இந்த மூணு நாளு சமாச்சாரம் என்ன?

பேமானி: அதுவா முழுகாம இருக்கிறது. அடக் கம்மிண்ணு இரு. வாசிக்கிறன். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜனநாயகவாதிகளால் கூட்டப்பட்ட இந்த அமர்வில் அவுஸ்திரேலிய, ஐரோப்பிய மற்றும் வட அமரிக்க மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

படிச்சவன்:முக்கண்டம்(அவுஸ்திரேலிய, ஐரோப்பிய மற்றும் வட அமரிக்க ),முக்கொடி என மும்முரசார்ந்தவர் ……

கோமாளி: அட இவங்க வேறை,அவங்க வேறை.சும்மா கொளப்பிறாங்க. முக்கிய முடிவுகளைச் சொல்லு.

பேமானி: இவங்க கொளப்பித்தான் நாம கோவணத்தோட இருக்கோமில்ல.சேதியைக் கேளு.

“இந்த அமர்வில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான யாப்பு விவாதிக்கப்பட்டு, பல திருத்தங்கள் உள்வாங்கப்பட்டு ஏகமனதாக அவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அத்துடன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான அவைத்தலைவர், ஆட்சிக்குழு மற்றும் நிறைவேற்றுக்குழுக்களுக்கான தெரிவுகளும் இடம்பெற்றன.”

கோமாளி:அவ்வளவுதானா!

பேமானி: பின்னால படம் போட்டிருக்கண்ணே! எல்லாரும் இனிப் பார்த்துக்கோண்ணே.

படிச்சவன்: பார்த்தா படிச்சவங்களா தெரியுது.கோட்டுசூட்டு,கொம்பியூட்டர்………….எல்லாம் இனி oasisதான்.

பாமரன்:கொலுபொம்மைகள்,கொசுவம் கொறைஞ்ச புடவைக் கட்டு,தொப்பை,தொப்பி,…நம்ம றாலாமி’யிட குத்துவிளக்கு,கோவணத் துண்டா தொங்கிற கொடி…அடிடா சுந்தரலிங்கம்.

கோமாளி:அட   நம்ம பணயக்கைதி வாழ்விற்கு, நாம்  என்ன செய்யிறது?

…..அந்தப் பாட்டு ரீங்காரமிடுகிறது.

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை

பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
துணிவும் வரவேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வரவேண்டும் தோழா

வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்
கோழை குணம் மாற்று தோழா
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று தோழா

அன்பே உன்அன்னை
அறிவே உன் தந்தை
உலகே உன் கோவில்
ஒன்றே உன்வேதம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s