இரட்சகர்களும் ஈழக்கனவும்.


கெரில்லாப் போராட்டமாக ஆரம்பித்த எமது ஆயுதப் போராட்டம் “தன் கையே தனக்குதவி” என்றபடி வழி தொடர்ந்தது.
மறைவிடங்களாக இருக்க வேண்டிய சொந்த மண்ணை துறந்து,தமிழகத்தை நோக்கிய பயணந்தான் ‘இரட்சகர்களை’ தேடும்
முதல் அடியாக ஆரம்பித்தது.
இரவல் சிந்தனையுடன்,இந்திய கூலிப் படையாக தயார்ப்படுத்தப்பட்ட ஒப்பனையுடன்,தன் கண்ணில் மண் தூவும் கதாபுருசர்கள் சிருஷ்டிக்கப்பட்டார்கள்.
இந்தியாவின் சிறந்த அடிமைகளாக,பிரிட்டிஷ் பேரரசிலிருந்து,இந்திய நேரு பரம்பரை வரை சிபார்சு பண்ணிய தமிழக தமிழ்த் தலைமைக் கங்காணிகளை,ஈழத்தமிழ் இயக்கக்காரர் நம்பினார்கள்.
இந்தத் தலைமைக் கங்காணிகள் புதைகுழிகளை ஈழத் தமிழர்களுக்கு தந்து விட்டு “புதையலோடு’ இருக்கிறார்கள்.புதையலின் பங்குதாரர்களாக புலம்பெயர் தமிழர்களின் தலைமையும் இருக்கிறார்கள்.
மீண்டும் இரட்சகர்களை இந்தியாவில் தேடும் பணியை,இதே ‘புதிய துடைப்பங்கள்” ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்தியாவில் வடக்கே வங்காளிகளும்,தெற்கே மலையாளிகளும் ஆளுமை மிக்கவர்கள்.ஆனால் தமிழர்கள் நல்ல  கங்காணிகள் மட்டுமே.இவர்களை ‘இரட்சகர்களாக’ நம்புகிற நடை பயணங்கள் ஆபத்தானவை.கோடை கால கூத்துகளுக்கு,உண்டியல் குலுக்கிகளுக்கு,தமிழ்நாட்டு சீமான்களும்,வைக்கோ கைக் கூகளும் உதவலாம்.

ஈழ மண்ணில் பணயக் கைதிகளாக வாழும் மக்களுக்கு இவர்களால் எந்தப் பயனுமில்லை.
ஒரே தவறை மீண்டும் செய்வது முட்டாள்தனமானது.வேறு விதமாகச் சிந்திப்போம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s